கடவுள் வருகை மற்றும் உலகத்தின் முடிவை குறித்து அறிந்து கொள்ளும்படியாக முக்கிய உதாரணங்களை நான் இங்கு கூற விரும்புகிறேன்.
சற்று நம் எல்லோருடைய கண்ணோட்டத்தை வெளி புறமாக செலுத்துவோமானால் நம்மால் ஒரு சில காரியங்களை கவனிக்க இயலும்.
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நம்மை சுற்றி என்னென்ன நடந்து கொண்டு இருக்கிறது? இதன் முடிவு என்ன?
ஏழை மக்கள், நடுத்தர மக்கள், பணக்கார மக்கள் என்று நம்மால் மனிதர்களை மூன்று விதமாக பிரிக்கஇயலும். இன்றைய காலா கட்டத்தில் நம் ஒவ்வொருவருடைய கனவானது என்னவாய் இருக்கிறது? நம் நன்றாக இருக்க வேண்டும். நம் குடும்பம், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே.
குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்பு அழகான இயறக்கை சூழல்கள், ஆரோக்கியமான உணவு, நிம்மதியான வழக்கை போதும் என்று இருந்தோம். அனால் இப்போதைய சூழ்நிலையோ மிகவும் வித்தியாசப்படுகிறது. காரணம் நம் ஒவ்வொருவருடைய சுயநல எண்ணெங்களின் பிரதிபலிப்பே.
எல்லோருமே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார்கள். அது நியாமான ஒன்றாக இருந்தாலும் அதை ஒவ்வொருவரும் போதுமான அளவில், அவரவருடைய கனவிற்கு ஏற்றாற்போல நியமானமுறையில் உழைக்க வேண்டுமல்லவா? அப்பொழுது தானே சந்தோஷமான வசதியான வாழ்க்கையை வாழ இயலும்.
ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது? ஆடம்பர வாழ்க்கை வேண்டும் ஆனால் அது உழைக்காமல் அல்லது அதிகம் உழைக்காமல் அல்லது நியாமான முறையில் உழைக்காமல் வர வேண்டும் என்ற எண்ணமே இப்பொழுது எல்லோரிடமும் மேலோங்கி நிற்கின்றது.
இதனால் நாம் மற்றவர்களை பார்க்கிறோம். அவன் மட்டும் எப்படி இவ்வளவு விரைவில் பணக்காரணகினான்? அவன் தவறான முறையில் சம்பாதித்து இருந்தாலும் அவன் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளான், என்று மேலோட்டமான கணிப்பிலே, தானும் மற்றவர்களை போலவே தவறு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்படியாக ஒருவரை பார்த்து ஒருவர் கற்று கொண்டு இன்று உலகத்தில் கிட்டத்தட்ட 90-95 விழுக்காடுக்கு மேல் பாவம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் . என்ன செய்தாகிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிலே வந்து விட்டது.
அதாவது மனித மனமானது தவறுகளை சீக்கிரமாக கற்றுக்கொள்ளும். ஆனால் நன்மையான காரியங்களை கற்று கொள்ள இடம்கொடாது. எந்த பக்கம் அதிக விழுக்காடு உள்ளதோ அந்த பக்கமே மனமானது சாயும். நன்மையோ, தீமையோ எது நமக்கு சந்தோஷத்தை அளிக்குமோ அந்த பக்கமே நாம் செல்கிறோம். அதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் அழித்து கொண்டிருக்கிறது.
நாம் நினைக்கிறோம் நாம் நன்றாகத்தானே இருக்கிறோம். நமக்கு ஒரு துன்பமும் இப்படி வாழ்வதனால் வரவில்லையே என்று. ஆனால் நீ விரைவாக சம்பாதிக்க நினைக்கும் இந்த ஒவ்வொரு எண்ணெங்களால் மற்றவர்களுக்கு என்ன ஆபத்து விளைகிறது என்று நாம் ஒருபொழுதும் யோசிப்பதில்லை. இதுதான் இன்றைய உலகிற்க்கு முற்று புள்ளியாக உள்ளது.
நான் மட்டுமா இப்படி நடந்து கொள்கிறேன்? எல்லோரும்தான் இப்படி இருக்கிறார்கள் என்று மற்றவர்களை கை காட்டி தப்பித்து கொள்ள விரும்புகிறார்கள். தன் பக்கமுள்ள நியாயத்தை தேடுகிறார்கள், அதாவது காரணத்தை தேடுகிறர்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் என்னென்ன துன்பங்கள், நோய்கள், கஷ்டங்கள் உள்ளதென்பதை வெளியரங்கமாக பார்த்தால் தெரியாது. அவர்கள் செய்கிற, செய்த பாவங்களினால் அவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பம், அவர்களை சுற்றி உள்ளவர்கள் அடைந்து கொண்டிருக்கிற துன்பங்களை அவர்களே அறிவர். அதனால் மற்றவர்களை உதாரணமாக கொள்ளாதிருங்கள். ஒன்றை நியாபகம் வைத்து கொள்ளுங்கள் இப்படிப்பட்ட காரணங்களை உலகத்தில் உங்களை போன்ற எண்ணம் உடையவர்கள் ஏற்று கொள்ளலாம். ஆனால் நியாத்தீர்ப்பு நாளில் இந்த காரணங்கள் எதுவும் செல்லாது.
சரி அப்படி ஒன்று நடந்தால் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு வரும். அதனால் எந்த பயமுமின்றி தவறு செய்ய துணிவோம். நான் இங்கு உள்ளவரை மகிழ்ச்சியாய் இருந்தால் போதும் மற்ற விளக்கங்களை அப்புறம் பார்த்து கொள்வோம் என்றும் பலர் நினைக்கிறார்கள், கற்று கொடுக்கவும்படுகிறார்கள். இப்படி தவறாக சிந்தித்து சிந்தித்து பாவத்தை எல்லோரும் மிகவும் சாதாரணமாக செய்கிறோம்.
சரி ஒரு உதாரணத்துக்கு கர்த்தர் வரமாட்டார் என்றே வைத்து கொள்வோம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த உலகம் இன்னும் எத்தனை தலைமுறை வாழும் என்று எண்ணுகிறீர்கள்? 2100, 2500 வருடங்களா?
இது வெறும் 5 அல்லது 6 தலைமுறை கணக்கின் வருடங்களே! இல்லையா?
சரி இன்று ஒரு நாளைக்கு எத்தனை நல்ல செய்திகள் மற்றும் எத்தனை கேட்ட செய்திகள் நீங்கள் படிக்கிறீர்கள்? அல்லது கேட்கறீர்கள்?
நல்ல செய்திகள் என்றாள் என்னென்ன செய்திகள்?
உங்களுக்கு, அல்லது நாட்டுக்கு நன்மை தரக்கூடியது? உதாரணமாக போராட்டம், உண்ணாவிரதம் போலானவைகள். இவைகளில் உங்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது. அப்படி இருந்தாலும் பெரிய புள்ளிகளுக்கு போகதான் நீங்கள் அனுபவிப்பீர்கள்.
கெட்ட செய்திகள் என்றல் என்னென்ன?
கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துக்கள், கற்பழிப்பு, சொத்து பிரச்சனைகள் , குண்டுவெடிப்பு , தீவிரவாதம், ஊழல், லஞ்சம், விலையேற்றம், இயற்கை பேரழிவு, போன்ற பல்வேறு கொடிய கொடிய செய்திகளை கேள்விப்படுகிறோம். அவைகளில் முன்பு பார்க்கிலும் இப்பொழுது கொடூரமாக நடக்கிறது. ஒரு மனிதனுக்கு மனித இறைச்சி எப்படி இருக்கும் என்று எண்ணம் தோன்றி கொலை செய்து அதை சாப்பிட்டு பார்த்த கொடூரங்கள், மற்றும் நாடகம் பார்க்க தடையாய் இருந்ததால் பெற்ற பச்சிளம் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொன்ற கொடூரம், ஆறு மாத பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரம், சிறு சிறு சண்டை சச்சரவுகளுக்காக கொலைகள், மகன் தந்தையை கொன்றான், விபச்சாரம், வயது வித்தியாசம் பார்க்காமல் வேசித்தனம், பெற்றவர்களை உதறி தள்ளும் பிள்ளைகள், கோடி கோடியாய் அரசியல் ஊழல்கள், புதிய புதிய கொடூரமான குணப்படுத்த முடியாத நோய்கள், சுற்று சூழல் மாசுபாடு, பணத்திற்காக ஏரிகள், நீர்நிலைகள், விவசாய பூமிகள், மரங்கள் அழித்தல், செயற்கை உணவுகள், மருந்தை மட்டுமே உட்கொண்டு வாழும் நிலைமை, ஆயுள் மிக குறைவு, வேலைவாய்ப்பின்மை, உழைக்காமலே உயர்வு, ஆடம்பரம் எதிர்பார்த்தால், நேர்மையாய் வாழ நினைப்பர்வகளுக்கு அதிக ஆபத்து, மதத்தின் மூலம் சம்பாதிக்கும் பெருமக்கள், தவறான போதனைகள், சிறு குழந்தைகள் கூட ஆபாச படங்கள் பார்க்க கூடிய சூழ்நிலைகள், சிறு பெண் குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பாதுகாப்பின்மை, எந்த சமயத்திலயும் போர்கள் நடக்க கூடிய தருணங்கள், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடைே பகை, ஒரே நிமிடத்தில் உலகத்தையே அழிக்க கூடிய ஆயுதங்கள், போன்றவைகள் இப்பொழுது வரைக்குமே இப்படி இருக்கையில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
என்ன தலை சுற்றுகிறதா?
மனிதன் 6ஆம் அறிவிலிருந்து 7-ஆம் அறிவுக்கு அறிவியளிலும், 3-ஆம் அறிவுக்கும் அதற்க்கு கீழும் மனிதாபி மானத்திலும் சென்று கொண்டு இருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் எந்திரமாக மாறுகிறான்.
இப்பொழுது சொல்லுங்கள் இன்னும் எத்தனை காலம், எத்தனை தலைமுறை? இந்த உலகம் நிலை நிற்கும். இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இதான் நிலை.
இல்லை இந்தியா மட்டும்தான் இப்படி உள்ளது. மற்ற வளர்ந்து நாடுகளில் மிகவும் ஒரு கட்டுப்பாடு உள்ளது என்று சொல்லுகிறீர்களா?. அப்படி என்றால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்களா? அங்கு உள்ள கலாச்சாரங்கள்தான் நம் இந்தியாவை சீரழித்து கொண்டு இருக்கிறது. இங்கு தவுறுகள் என்று நாம் கருதும் நிறைய விஷயங்கள் மேலை நாடுகளில் மிகவும் சாதாரண விஷயங்களாகவே கருதப்படுகிறது. அங்கு துப்பாக்கிகள் மிகவும் சாதாரணம். இவைகள் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை போலவே காட்சி அளிக்கலாம். ஆனால் ஒரு நாள் மனித சமுதாயம் தன் பொறுமையை இழக்கும் போது முதலில் மிருகமாக மாறுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். அது எப்படி என்றல் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற வசனத்திற்கு பொருந்த, ஒரு நாள் இவர்களே இந்த உலத்தின் அழிவுக்கு முக்கியமான காரணிகளாவார்கள். நம்பிக்கை இல்லை என்றல் ஆராய்ந்து பாருங்கள். இவர்களின் ஆயுத பலன்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்ற அனைத்து நாடுகளையும் தன் கட்டு பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய கொடூர என்னென்ங்கள் உடையவர்கள்.
இதெல்லாம் மாறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? சரிஎப்படி?
யார் திருத்த அல்லது, திருந்த தயாராக உள்ளீர்கள்?
நாட்டை விடுங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களை திருத்த உங்களால் முடியுமா? இதான் நீதி இதான் நேர்மை என்று?
இதிலிறுத்தே புரிந்து கொள்ளுங்கள் மனித குலம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று!
சிலர் சொல்லுவார்கள் போனால் போக வேண்டியதுதான் என்று! நண்பர்களே இந்த உலக வாழ்க்கைக்கு விடை கொடுத்த பிறகு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? சொர்க்கம், நரகத்தை பற்றி ஏதாவது நீங்கள் அறிவீர்களா?
சிலர் சொல்வதை கேள்விபட்டுரீப்பீர்கள் "எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று" அப்படி ஒன்று இருந்தால் ஏன் பாவம் செய்பவர்கள் எல்லாரும் நன்றாகத்தானே இருக்கீறார்கள் என்று யோசிப்பீர்கள் அல்லவா?
நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் கடவுள் நம்மை படைக்கும் போது நல்ல அறிவோடும், சிந்தனையோடும, அதாவது 6-அறிவோடும்தான் படைத்தார். நம்மிடம் உலகத்தில் வாழ எல்ல விதமான அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய சுயநல எண்ணெங்களும், பேராசைகளும்தான் உலகத்தை இந்த நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
நன்மை, தீமை என்பது, வெளிச்சம், இருட்டை போன்று இந்த உலகத்தில் இருக்கிறது. சொர்க்கம் நரகம் என்பது எல்லா மதங்களிலும் குறிப்பிடப்பட்டுறீக்கிறது. இதனால்தான் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் பாவம் செய்ய யோசிக்கிறார்கள். அதுவே கெட்ட உள்ளம் கொண்டவர்களுக்கு கொலை செய்வது மிகவும் சாதாரணமானவொன்று. குழந்தைகளை பெற்றோர் விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பது போல, நம்மிடம் எல்லாம் அதிகாரங்களும், அதாவது சுதந்திரமாக இருக்க விட்டு, முடிவில் அவர் கூறிய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நன்மையை செய்தவர்கள் சொர்க்கத்திற்கும், தீமை செய்தவர்கள் நரகத்திற்கும் செல்வது அதிகம் நிச்சயமல்லவா? அப்படி இல்லையென்றால் ஏன் நாம் எல்லோரும் ஒரு மாதிரியாக இருந்து விடலாமே.
சரி இதற்கும், வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடவுள் இரண்டாம் வருகைக்கும் என்ன சம்மதம் உள்ளது? மற்ற வேதங்களுக்கும், கிறிஸ்துவ வேதகமத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
மற்ற வேதாகமங்கள் கடவுளுடைய இரண்டாம் வருகை உலகத்தின் முடிவை குறித்து எல்லாம் ஒன்றும் கூறப்படவில்லை. அப்படி இருந்தாலும் இன்னும் பல்லாயிரம் வருடங்கள் மக்கள் வாழ்வதை போலவே குறிப்பிட்டுள்ளார்கள். அது மேற்கண்ட அனைத்து சம்பவங்களையும் நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்த்தால் அது பொய் என்றே புலப்படுகிறது. இன்னும் புரியும்படி கூறினால் தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருக்கும். அதுவும் வேதாகமத்தில் கூறுவது போல வெகு விரைவில் நிகழும்.
ஏனென்றால் 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவிடம் அவருடைய சீஷர்கள் உம்முடைய இரண்டாம் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் என்ன அடையாளங்கள் என்று கேட்டனர். அதற்கு இயேசு மத்தேயு 24:3 இல் கூறியுள்ளது என்னவென்றால்.
3. பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
16. யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
17. வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
18. வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
19. அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
28. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
36. அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
37. நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
38. எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
39. ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
40. அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
41. இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
42. உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
45. ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது அப்படிச்செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
49. தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
50. அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
51. அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

என்ன சகோதர சகோதரிகளே என்ன இது எந்த வேதத்திலும் கூறாது ஒன்று, இங்கு வித்தியாசமாக உள்ளதே என்று வியப்புடன் பார்க்குறீர்களா?
எவ்வளவு காலம்தான் இப்படி பணம், ஆஸ்திகளுக்காக ஒருவராலும் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத காரியங்களை செய்து கொண்டுரிப்பீர்கள். ஒரு முடிவு வேண்டாமா இதற்கெல்லாம்?
நான் ஒரு பாவமும் செய்யவில்லையே. பாவம் செய்தவர்கள் தானே அழிவது நியாயம் என்று தோன்றுகிறதா?
உங்கள் கேள்வி நியாம்தான்.
அப்பொழுது நீங்கள் பாவம் செய்யவில்லையா? கொலை, கற்பழிப்பு மட்டும் பாவம் அல்ல. பொறாமை, வஞ்சம், பேராசை, மற்றவர்களுக்கு உதவாமை, மற்றவர்கள் தவறுகளை மன்னியமாய், போன்றவைகளும் பாவம்தான் நண்பர்களே!
நான் ஒன்றும் கடவுள் இல்லை பாவம் செய்யாமல் இருப்பதற்கு, என்று உடனே உங்கள் அறிவு புத்திசலித்தனமாக பிதற்றுமே?
இப்படி செய்யவே முடியாது என்று நாம் நினைத்த காரியங்களை செய்து காட்டியவர்தான் நம் இயேசு கிறிஸ்த்து.
சாதாரண மனிதனாக, ஏழை குடும்பத்தில் பிறந்து, ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டினார்.
இவரை போல பல மகன்கள் பிறந்துள்ளார்களே! இவரும் அவர்களில் ஒருவர்தான் தவிர பெரிய மகத்தானது இதில் ஒன்றும் இல்லை எங்கிறீர்களா?
பல மான்கள் பிறந்திருக்கலாம், வாழ்ந்திருக்கலாம். ஆனால் இவரை போல பல அதிசயங்கள் செய்தவர் ஒருவரும் இல்லை. குறிப்பாக மரித்தோர் பலரை உயிரோடு பிழைக்கை வைத்திருக்கீறார். இவர் வேதாகமத்தில் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் நம் நிகழ் கால வாழ்வில் மிக துல்லியமாக நிறைவேறிக்கொண்டு
இருக்கிறது.
இவரை போல தாழ்மை உள்ளம் கொண்டவர் ஒருவரும் இந்த உலகத்தில் வாழ்ந்ததில்லை. இவருடைய வாழ்க்கையில் ஒருவன் நல்ல போதகர் என்று கூறியதும், உடனே இவர், என்னை நல்லவனென்று கூறாதே. பிதா ஒருவரை தவிர நல்லவன் ஒருவனுமில்லை என்று கூறியவர்.
என்னிலடங்கா சக்திகள் இருந்தும் தன்னை சிலுவையில் அறைந்து, அசிங்க படுத்தப்பட்டு, அவமான படுத்தப்பட்டு, காரி உமிழப்பட்டும், ஒன்றும் செய்யாமல், தன் பிதாவின் சொல் கீழ்ப்படிந்து நமக்காக, நம் பாவங்களுக்ககாக சிலுவையில் தன்னையே ஒன்றும் அறியாத ஒரு சிறிய ஆட்டு குட்டியை போல ஒப்பு கொடுத்தார். அது என்ன நமக்காக, நம் பாவங்களுக்காக என்று யோசிப்பீர்கள்? அது வெறும் ஒரு வரி விளக்கம் அல்ல. பல்வேறு தேவ காரியங்கள் உள்ளடங்கியுள்ளது அதில். வேண்டுமென்றால் கர்த்தரிடம் ஜெபித்து ஆராய்ந்து பாருங்கள்.
என்னடா இவன் எதற்கெடுத்தாலும் ஆராய்ந்து பார் ஆராய்ந்து பார் என்று சொல்கிறானே என்று யோசிக்கிறீர்களா? நம் முன்நோர்கள், மற்றும் பெற்றோர்கள் சொன்ன பல காரியங்களை ஆராயாமலே கண்மூடி தனமாக நம்பும் நீங்கள், அதை ஆராய்ந்து பார்த்துளீர்களா? இல்லை. அதனால் தான் உங்களுக்கு உண்மையெது, பொய்யெதென்று பகுத்தறிய இயலவில்லை. பல உண்மைகளை ஏற்று கொள்ள மனமில்லாமல் மறைக்க முற்படுகிறார்கள்.
இனியும் அப்படி இராமல், ஏன் நான் கூறும் இந்த விஷயங்களை கூட அப்படியே நம்பாமல் ஆராய்ந்து பார்த்து அறியுங்கள்.
இயேசு ஒரு கணம் தன்னை வேதனை படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், அவர்களில் ஒருவரும் மிஞ்சி இருக்க மாட்டார்கள்.
தன்னை சிலுவையில் அறைகிற அப்படி பட்ட சூழ்நிலையிலும் ஒரு மனிதனாலும் கூற முடியாத வார்த்தையை அவர் கூறினார்.
"பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றார்". இவர் இடத்தில் யாராக இருந்தாலும் தனது சத்தியை வெளிப்படுத்தி தான் யார் என்று
காட்டியிருப்பார்கள்.
இவர் அன்று கொண்ட அந்த பொறுமையே இன்றும் உலகம் முழுவதும் இவரை பின் பற்றுகிற கூட்டம் யார் தடுக்க நினைத்தாலும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மற்றவர்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அடையாளங்கள் பெயர் கூற்றாகவோ, அல்லது நிரூபிக்க
படாத கட்டுக்கதைகளாகவே இருக்கின்றது. ஆனால் இவர் வாழ்ந்ததற்க்கும், மறைந்ததற்கும் உண்மையான ஆதாரங்கள் இன்றும் உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வேதகமானது, பல்வேறு வருட காலக்கட்டத்தில் பல்வேறு தேவனால் ஏவப்பட்ட பிள்ளைகள், பல்வேறு இடங்களில், பல்வேறு மொழிகளில் எழுதபட்டிருந்தாலும், ஆச்சர்யமிக்கதாய் ஒன்றோடொன்று இணைப்புள்ளதாய் காணப்படும். புரியும்படி கூறினால் ஒரே மனிதர் எழுதியதை போலவே காணப்படும். இவைகளில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளெல்லாம்
விஞ்ஞானிகளால் ஆம் என்று நிரூபிக்க பட்டுக்கொண்டு வருகிறது.
மேலும் சில உண்மையான காரியங்களை நாம் பின்பு காண்போம்.
நண்பரே அப்பொழுது இந்த உலக அழிவில் இருந்து தப்பி
கொள்ள வழியே இல்லையா என்று கேட்கறீர்களா?
அதற்கும் இயேசு பல்வேறு வழிகளை கூறியுள்ளார். உடனே நீங்கள் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? ஏதாவது பணம், அல்லது விலை உயர்ந்த காணிக்கைகள் செலுத்த வேண்டுமா என்று
நினைக்கிறீர்களா? பயப்படாதிருங்கள் இவைகள் எல்லாம் சாமி
கேட்கிறார் என்று தன் சுயநலத்திற்காக செய்யும் மனிதர்கள் செய்வது. ஆனால் நம் தேவன் விரும்பும் ஒரே காணிக்கை நம்
பரிசுத்தமான உள்ளம் மட்டுமே! அவருடைய வார்த்தைகளுக்கு
கீழ்ப்படிந்து நடப்பதே அவர் விரும்புவார்.
உலக வாழ்க்கையும், பரலோக வாழ்க்கையையும் இயேசு
இவ்வாறு மத்தேயுவில் 6 ஆம் அதிகாரம், 24 மற்றும் 33 இல் கூறியுள்ளார்.
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
அதே போல யாரெல்லாம் அவர் வருகையிலே பரலோகத்தில் சென்றடைவார்கள் என்று தீர்க்கமாய் குறிப்பிட்டுள்ளார். மத்தேயு 7ஆம் அதிகாரம் 21-27 ஆம் வசனம் வரை
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
அதேப்போல் உலகத்தில் உள்ள துன்பங்களிலிருந்து ஒருவர் இறந்து விட்டால் முடிவு உண்டு. அதாவது ஒருவருடைய உடம்புக்கு. ஆனால் ஆத்துமாவுக்கல்ல. வேதத்தில் இயேசு நரகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். மத்தேயு 5 ஆம் அதிகாரம் 29-30ஆம் வசனங்கள்.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
நீ நரகத்திற்கு செல்வதை விட, உன்னை பாவம் செய்ய தூண்டுகிற உடல் உறுப்பை தூக்கி எரிந்து விடு என்கிறார். ஏன் தெரியுமா? நரகமானது அவ்வளவு மோசமானது. பாவம் செய்பவர்கள் இப்பொழுது வேண்டுமானால் நலமாய், சுகமாய் வாழலாம், அல்லது ஏதேதோ கரணங்கள் காட்டி பாவம் செய்து கொண்டே இருக்கலாம். ஆனால் அவர்கள் நித்ய நித்தியமாய் நரகத்தில் பங்கெடுப்பார்கள் என்பது உண்மை. ஒரு வேலை உங்கள் 6-வது அறிவோ, அல்லது படிப்பறிவோ, அல்லது மற்றவர்கள் பொய் உபதேசங்களோ உங்களை இவைகள் எல்லாம் பொய் என்று சிந்திக்க செய்யலாம். ஆனால் மேற்க்கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.
நீங்கள் தேவன் கூறியவைகளை செய்யும்போது உங்களை அனைவரும் முட்டாள், ஏமாந்தவன், பைத்தியக்காரன், இவைகள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது, என்று உங்களை மட்டமாக பேசுவார்கள். தேவனுடைய இந்த வார்த்தையை கேளுங்கள். மத்தேயு 5 அதிகாரம் 2 முதல் 16 வரை படியுங்கள்.
2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
ஆதலால் இதை வாசிக்கிற நீங்கள் யாராய் இருந்தாலும் சரி, கடமைக்காக, பண்பாட்டிற்காக, வழி முறைக்காக, கண்மூடித்தனமாக வாழாமல், உன்மையை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.
இது வெறும் வேதத்தில் உள்ள மிக சிறிய விஷயங்களே. இன்னும் எண்ணிலடங்கா உண்மைகள் உள்ளன. அவைகளை தேவனின் உதவியால் ஆராய்ந்து அறியுங்கள். குறிப்பாக தேவன் அருவருக்கிறமுக்கியமான ஒன்று விக்ரக ஆராதனைகள். இயேசு கிறிஸ்த்துவின் சிலையாக இருந்தாலும் சரி. அதை வழிபடுவதை அவர் நேசிப்பதில்லை. சிலை வழிபாடுகள் மற்றும் அதன் அருவருப்புகள்
குறித்து பல்வேறு இடங்களில் வேதாகமத்தில் தேவ வார்த்தைகள் உண்டு. அவைகளை விட்டு வேதத்தின் மூலமாக தூய மனதால் தேவனை தேடுங்கள்.
அதே போல வேதாகமத்தில் உள்ள சத்தியத்திற்கு
கீழ்படியாத ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவாக இருந்தாலும் சரி நீங்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்பதை நினைவு கூறுங்கள்.
நீங்கள் தினம் மூன்று வேலைகள் வேதாகமம் படித்திருக்கலாம், நியானஸ்தானம் பெற்று இருக்கலாம், பல வருடங்களாக தேவாலயத்துக்கு சென்று இருக்கலாம். ஆனால் வேதத்தில் உள்ள சத்தியத்திற்கு கீழ் படியவிட்டால் நீங்கள் நிச்சயமாக பரலோகம் செல்வது கடினம்.
நீங்கள் வேதத்தில் குறிப்பிட்டுள்ள சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து
வாழும் பொழுது பல்வேறு சோதனைகளும், கஷ்டங்களும் சந்திக்க நேரிடலாம். அப்படி இருந்தும் இடுக்கமான பரலோக வாசல் வழியாய் மன சோர்வு இல்லாமல் உட்ப்பிரவேசிப்பவனே
பரலோகத்தில் நுழைய முடியும்.
இப்படி ஒரு சத்தியத்தை எந்த ஒரு வேதாகமம் ஆணித்தனமாக கூறியது கிடையாது. ஆதலால் சத்தியத்தை அறிந்து அதன்படி நடந்து பரலோக இராஜ்ஜியத்தில் பொக்கிஷங்களை சேமித்து வையுங்கள்
இனி காலம் செல்லாது அவர் வருகை சமீபத்திருக்கிறது. மனம்திரும்புங்கள்!!
அதே போல் தேவ வருகை இதோ இன்று , இதோ நாளை என்ற பொய்யான உபதேசங்கள் அளிக்கப்படும். கர்த்தரே தன் இரண்டாம் வருகை குறித்து பிதா ஒருவரை தவிர வேறு ஒருவரும் அறியார் என்று கூறியுள்ளார் அதனால் கள்ள உபதேசங்களுக்கு எச்சரிக்கையாய்
இருங்கள்.
தேவனுக்கு சித்தமானால் இன்னும் பல்வேறு காரியங்களை பின் வரும் காலங்களில் விளக்கமாக காண்போம். முடிந்த வரை இந்த செய்திகளை வாட்சப் மூலமாக கிறிஸ்துவம், மற்றும் அல்லாத அனைவருக்கும் பரப்பவும். ஆமென்!
No comments:
Post a Comment